Sunday, February 6, 2011

மதம்


பொதுஅறிவு - இந்து மதம்

தேவர்களின் குரு பிரகஸ்பதி.

அசுரர்களின் குரு சுக்கிராச்சாரியார்.

தேவர்கள் தலைவன் இந்திரன்.

சிவன் இருப்பிடம் கைலாயம்.

விஷ்ணுவின் இருப்பிடம் வைகுண்டம்.

பிரம்மாவின் இருப்பிடம் சத்யலோகம்.

சிவனின் வாகனம் காளை.

விஷ்ணுவின் வாகனம் கருடன்.

பிரம்மாவின் வாகனம் அன்னம்.

சிவனின் மனைவி பார்வதி.

விஷ்ணுவின் மனைவி லட்சுமி.

பிரம்மாவின் மனைவி சரஸ்வதி.

முருகன் வாகனம் மயில்.

விநாயகரின் வாகனம் மூஞ்சூறு.

சனி பகவானின் வாகனம் காகம்.

தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்கள் 274.

ஆழ்வார்களால் மங்களா சாஸனம் பெற்ற திவ்ய தேசங்கள் 108.

காசியப முனிவருக்கும் அதிதிக்கும் பிறந்தவர்கள்தான் தேவர்கள்.

‘திருநாளைப் போவார்’ என்று அழைக்கப்படுபவர்: நந்தனார்.

சிவபெருமான் நிகழ்த்திய திருவிளையாடல்கள் மொத்தம் 64.

தமிழ்க் கடவுள் முருகன்.

நான்கு யுகங்களாவன: கிரேதா, திரேதா, துவாபர, கலி.

கி.மு. 3102 - ல் கலியுகம் தொடங்கியது.

கலியுகம் தொடங்கிய வருடத்தில் பாரதப் போர் நடைபெற்றது.

விஷ்ணுவின் அவதாரங்களில் முதலாவது மச்சாவதாரம்.

ஆதிசங்கரர் பிறந்த ஊர் காலடி.

சங்கரரின் தத்துவம் அத்வைதம்.

பூரி, துவாரகா, ரிஷிகேஷ், சிருங்கேரி ஆகிய இடங்களில் ஆதிசங்கரர் மடங்களை நிறுவினார்.

ராமானுஜர் போதித்தது விசிஷ்டாத் வைதம்.

ராமானுஜர் ஸ்ரீபெரும்புதூரில் பிறந்தார்.

ராமானுஜர் "திருப்பாவை ஜீயர்" என்று சிறப்பிக்கப்படுகிறார்.

மத்வாச்சாரியார், கர்நாடகாவில் உள்ள கல்யாண்புராவில் பிறந்தார்.

மத்வர் போதித்த தத்துவம் த்வைதம்.

மீராபாய், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்.

‘இந்துவும் முஸ்லீமும் ஒரே களிமண்ணால் செய்யப்பட்ட பானைகள்" என்று சொன்னவர் கபீர்தாசர்.

கபீர்தாசர், நெசவாளர் குடும்பத்தை சேர்ந்தவர்.

பக்திமார்க்கத்தை பரப்புவதற்கு முதலில் இந்தியை அதிகம் பயன்படுத்தியவர் கபீர்தாசர்.

பொதுஅறிவு - கிறிஸ்தவம்

பொதுஅறிவு - கிறிஸ்தவ மதம்



இயேசு கிறிஸ்து இஸ்ரேல் நாட்டில் ஜெருசலம் அருகிலுள்ள பெத்லஹேமில் பிறந்தார்.

கிறிஸ்து பிறக்க இருக்கும் செய்தியை மரியாளுக்கு அறிவித்த தேவதூதர் காபிரியேல்.

இயேசு என்பதன் பொருள் ‘கடவுளின் மீட்பு’.

கிறிஸ்து என்ற சொல்லுக்கு ‘அபிஷேகம் பண்ணப்பட்டவர்’ என்று பொருள்.

புதிய ஏற்பாட்டில் நூறு முறை தேவகுமாரன் என்று இயேசு குறிப்பிடப்படுகிறார்.

வரலாற்றறிஞர்களின் கருத்துப்படி இயேசுவின் பெற்றோர் ஜோசப், மேரி.

இயேசுவின் தந்தை ஜோசப் தச்சுத்தொழிலாளி.

இயேசுவுக்கு ஞானஸ்நானம் செய்தவர் யோவான்.

இயேசுவை யூதர்களின் மெசியா (மீட்பர்) என்பர்.

இயேசுவின் சீடர்கள் பெயர் அப்போஸ்தலர்கள்.

இயேசுவைக் காட்டிக்கொடுக்க சீடன் யூதாஸ் வாங்கிய லஞ்சம் முப்பது வெள்ளி.

இயேசு சிலுவை யில் அறையப்பட்ட தினம், புனித வெள்ளியாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

இயேசு உயிர்த்தெழுந்த நாளான ஞாயிறு ஈஸ்டர் விழா.

இயேசுவுக்கு பதில் விடுவிக்கப்பட்ட கொள்ளைக்காரன் பராபஸ்.

நார்வே ஸ்புரூஸ் மரம்தான் கிறிஸ்துமஸ் மரம்.

கிறிஸ்துமஸ் தாத்தா என்பவர் செயின்ட் நிக்கோலஸ்.

கிறிஸ்தவ மதத்தின் பெரும் பிரிவுகள் ப்ராட்டஸ்டன்ட், ரோமன் கத்தோலிக்கம்.

ரோமன் கத்தோலிக்கர்களின் தலைவர் போப் ஆண்டவர்.

‘தேம்பாவணி’ எழுதியவர் வீரமாமுனிவர்.

தமிழில் அச்சான முதல் நூலான தம்பிரான் வணக்கம், கிறிஸ்தவ நூல்.

பொதுஅறிவு - இஸ்லாம்

பொது அறிவு - இஸ்லாம் மதம்



‘இஸ்லாம்’ என்ற அரபுச் சொல்லுக்கு ‘பணிதல்’ ‘கீழ்ப்படிதல்’ அல்லது ‘சமாதானம்’ என்று பொருள்.

புனித நூலான திருக்குர்ஆன் அரபு மொழியில் அமைந்தது. இதில் 114 அதிகாரங்கள், 6666 வசனங்கள் உள்ளன.

‘பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்’ என்பது திருக்குர்ஆனின் முதல் வசனம். இதை இஸ்லாமிய அப்ஜத் எண் கணக்குப்படி 786 என்பர்.

‘அல்லாஹ¨ அக்பர்’ என்ற வாக்கியத்திற்கு ‘அல்லாஹ் மிகப் பெரியவன்’ என்று பொருள்.

முஹம்மது நபியின் பெற்றோர் அப்துல்லாஹ், ஆமினா.

முஹம்மது நபிக்கு ஜிப்ரீல் என்கிற தூதர் மூலம் திருக்குர்ஆன் அல்லாஹ்வால் வழங்கப்பட்டது.

முஹம்மது நபிக்கு 40 வயதில் தொடங்கி, 63 வயதுவரை திருக்குர்ஆன் சிறிது சிறிதாக வழங்கப்பட்டது.

ஹிஜ்ரி எனும் சகாப்தம், முஹம்மது நபி மெக்காவிலிருந்து மதீனாவுக்குப் பயணமான கி.பி. 622 - ஆம் ஆண்டு தொடங்குகிறது.

ஹிஜ்ரி காலண்டரில் 12 மாதங்கள்.

ஹிஜ்ரி காலண்டர், சந்திரனின் தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டதால் வருடத்திற்கு 355 நாட்கள்.

ரபியுல் அவ்வல் மாதம், 12 - ஆம் தேதி, திங்கட் கிழமை பிறந்து 63 ஆண்டுகளுக்குப் பிறகு அதே ரபியுல் அவ்வல் 12 - ஆம் தேதி, திங்கட்கிழமையே முஹம்மது நபி மரணமடைந்தார். இந்த நாளே ‘மீலாது நபி’.

தினமும் ஐந்து வேளை தொழுவது இஸ்லாமியர்களின் கடமைகளில் ஒன்று.

ரம்ஜான் மாதம் முழுவதும் நோன்பு கடைப்பிடித்து ஷவ்வால் மாதத்தின் முதல்நாள் ரம்ஜான் (ஈத் - உல் - ஃபித்ர்) கொண்டாடப்படுகிறது.

பக்ரீத் பண்டிகை(ஈத் - உல் - ஜுஹா), இறைதூதர் இப்ராஹீமின் தியாக உணர்வை கண்ணியப்படுத்தி கொண்டாடப்படுவது.

பக்ரித்தின்போது மெக்காவில் நடைபெறும் தொழுகை, சடங்குகளில் பங்குகொள்ள முஸ்லிம்கள் செய்யும் புனிதயாத்திரை ஹஜ்.

முஹம்மது நபியின் வரலாறான சீறாப்புராணத்தை எழுதியவர் உமறுப் புலவர்.

மசூதி: இஸ்லாமியர்களின் வழிபாட்டுத்தலம். தர்கா: இஸ்லாமியப் பெரியவர்களின் சமாதி உள்ள இடம்.


பொதுஅறிவு - புத்த, சமணம்

பொது அறிவு - புத்த, சமண மதங்கள்



கி.மு. 6 - ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சமண சமயமும், புத்த சமயமும் தோன்றின.

புத்த மதத்தைத் தோற்றுவித்தவர் புத்தர்.

புத்தரின் இயற்பெயர் சித்தார்த்தர்.

சித்தார்த்தர் கபிலவாஸ்து நாட்டிலுள்ள லும்பினியில் பிறந்தார்.

சித்தார்த்தரின் பெற்றோர் சுத்தோதனர், மகாமாயா.

சித்தார்த்தரின் மனைவி யசோதரா, மகன் ராகுலன்.

சித்தார்த்தரின் வளர்ப்புத் தாய் கௌதமி.

புத்தர் என்ற பெயருக்கு ஞானம் பெற்றவர் என்று பொருள்.

புத்தரின் போதனைகள் அடங்கிய நூல்கள் ‘திரிபீடகங்கள்’.

புத்தமதக் கருத்துக்கள் பாலி மொழியில் அமைந்தவை.

அசோகர், கனிஷ்கர் போன்ற அரசர்களால் புத்தமதம் வெளிநாடுகளில் பரவியது.

கனிஷ்கர் காலத்தில் புத்தமதம் ஹீனயானம், மஹாயானம் என்று பிரிந்தது.

ஹீனயானப் பிரிவினர், புத்தரை ஒரு முனிவராகக் கருதினர்.

மஹாயானப் பிரிவினர் புத்தரைக் கடவுளாக வழிபட்டனர்.

புத்தர் மறைந்த இடம் குஷிநகரம்.

சமண சமயத்தை உருவாக்கியவர் வர்த்தமான மகாவீரர்.

மகாவீரர் வைசாலியில் உள்ள குண்டக்கிராமத்தில் பிறந்தார்.

24வது, கடைசி தீர்த்தங்கரராகக் கருதப்படுகிறார் மகாவீரர்.

தீர்த்தங்கரர் என்ற வார்த்தைக்கு கோட்டை கட்டுபவர் என்று பொருள்.

முதல் தீர்த்தங்கரர் ரிஷபா, 23வது தீர்த்தங்கரர் பர்ஷவனாதர்.

மகாவீரர் அசோக மரத்தடியில் ஞானம் பெற்றபின் ஜினா என்று அழைக்கப்பட்டார்.

‘ஜினா’ என்றால் வெற்றிபெற்றவர் என்று பொருள். இச்சொல்லில் இருந்து Jainism என்ற பெயர் உருவானது.

சமண சமயத்தின் இருபிரிவினர் - திகம்பரர் மற்றும் ஸ்வேதம்பரர்.

ஆடை அணியாத திகம்பரர்களின் தலைவர் பத்ரபாகு. வெண்ணிற ஆடை அணிந்த ஸ்வேதம்பரர்களின் தலைவர் ஸ்தலபாகு.

சமணசமயம் திகம்பரர்களால் தென்னிந்தியாவிலும், ஸ்வேதம்பரர்களால் வட இந்தியாவிலும் பரவியது.

ராஜஸ்தானில் உள்ள தில்வாரா ஜெயின் கோயிலும், கர்நாடகாவிலுள்ள சிரவணபெல கோலாவும் சமணர்களின் புனிதத்தலங்கள்.

பொதுஅறிவு - சீக்கியம்

பொது அறிவு - சீக்கியம்




சீக்கிய மதத்தைத் தோற்றுவித்தவர் குருநானக்.

குருமுகி எழுத்துமுறையை உருவாக்கியவர், 2 - ம் குரு அங்கத்.

அமிர்தசரஸில் பொற்கோயில் கட்டுவதற்கான நிலம் அக்பரால், 4 - ஆவது சீக்கிய குருவான ராம்தாஸுக்குக் கொடுக்கப்பட்டது.

சீக்கியர்களின் புனிதத்தலமான அமிர்தசரஸில், பொற்கோயிலைக் கட்டியவர், 5 - ஆவது சீக்கிய குருவான அர்ஜுன்சிங்.

சீக்கியர்களின் புனித நூலான ஆதிகிரந்தத்தைத் தொகுத்தவர் 5 - ம் குருவான அர்ஜுன்சிங்.

கல்சா எனும் ராணுவ அமைப்பை ஏற்படுத்தியவர் 10 - ஆவது குருவான கோவிந்த்சிங்.

குரு கோவிந்த்சிங் ஆதிகிரந்தத்தை,"குரு கிரந்தசாஹிப்" என்று பெயர் மாற்றி அதுவே சீக்கியர்களின் நிரந்தர குரு என்று அறிவித்தார்.

சீக்கியர்களின் உலக புகழ்பெற்ற வழிபாட்டுத் தலம் பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸிலுள்ள பொற்கோவில்.

சீக்கியர்கள் நீளமான முடி (Kesh) தலைப்பாகை (Kangha), இரும்பு காப்பு (Kara), நீண்ட கால்சட்டை (Kachcha), வாள் (Kirpan) ஆகிய ஐந்தையும் (5k’s) ஒவ்வொரு சீக்கியரும் கொண்டிருப்பர்.